
குதிரைவாலி (Barnyard Millet)
பண்டைத் தமிழ் நாட்டில் சோறாக்கப் பயன்பட்ட ஒரு உணவு தானியம் வரகு. நாம் இந்நாளில் உண்ணும், நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியே பின்னாளில் வந்ததுதான்!
இது சோறாக்கச் சற்றுக் கடினமானாலும், அரிசியைவிடப் பலமடங்கு சத்தானது, நீரிழிவை உண்டாக்காது! அரசிச் சோற்றின் அளவில் பாதிக்கும் கீழ் அளவு சோறு போதும்.
சிறு தானியங்கள் நார்ச்சத்து மிக்கவை.அரிசியை விட மாவுச்சத்து குறைவு.ஆகவே சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
சிறு தானியங்களில் புரதம் , கால்சியம் சத்து அதிகம். ஆகவே உடல் வளர்ச்சிக்கு நல்லது.